86 F
Tirunelveli
Friday, February 26, 2021
முகப்பு மாவட்டம் சென்னை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் தனது குடும்பத்துடன் பொங்கல் விழா...

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் தனது குடும்பத்துடன் பொங்கல் விழா கொண்டாடினார்

சென்னை – ஜன – 15 ,2021

நமது நிருபர் : ஹெச்.எம்.ரிஸ்வான்

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் தனது குடும்பத்துடன் ராஜரத்தினம் கவாத்து மைதானத்தில், காவலர் குடும்பத்தினருடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தார்

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் இன்று மாலை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்திலுள்ள ராஜரத்தினம் மைதானத்தில், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினருடன் பொங்கல் விழா கொண்டாடினார். போலீஸ் கமிஷ்னர் அவரது துணைவியார் டாக்டர்.வனீதா அகர்வால் உடன், ஆயுதப்படை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, காவலர் குடும்பத்தினரின் பொங்கல் பானையில் அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை போட்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் பொங்கலையொட்டி நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். போலீஸ் கமிஷ்னர் சிறப்புரையில், சமீபத்தில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையிலிருந்து ஆயுதப்படைக்கு அறிக்கை செய்த பெண் காவலர்களின் கலை நிகழ்ச்சிகள் ரசிக்கும் வண்ணம் இருந்ததாகவும், கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் காவலர்களுக்கு தலா ரூ.500/- வெகுமதி வழங்குவதாக கூறினார். மேலும், பொங்கலை முன்னிட்டு ஆயுதப்படை பெண் காவலர்களுக்கு சுழற்சி முறையில் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் எனவும் காவல் கமிஷ்னர் தெரிவித்தார்.

இவ்விழாவில் சென்னை பெருநகர காவல், கூடுதல் கமிஷ்னர்கள் அமல்ராஜ் (தலைமையிடம்), தினகரன், (தெற்கு), கிழக்கு மண்டல இணை கமிஷ்னர்.சுதாகர்,காவல் துணை கமிஷ்னர்கள் திரு.கிருஷ்ணராஜ், (போக்குவரத்து/வடக்கு, பொறுப்பு:திருவல்லிக்கேணி), சௌந்தரராஜன் (ஆயுதப்படை-I), ரவிச்சந்திரன் (ஆயுதப்படை – II), கோபால் (மோட்டார் வாகனப்பிரிவு), ஆயுதப்படை உதவி கமிஷ்னர்கள் காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் அவர்தம் அவர்தம் குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

17,007FansLike
19FollowersFollow
341SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 19 பேருக்கு...

தூத்துக்குடியில் சாலைவிபத்து குறித்து தகவல் சேகரிக்கும் இனையதள பயிற்சி வகுப்பு மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய...

சலவை தொழிலாளியின் நேர்மையை கண்டு வியந்து சேலம் போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து...

0
சேலம் - பிப் - 25 ,2021 சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில்...

மாணவ மாணவிகளிடம் நெல்லை துணை கமிஷ்னர் கலந்துரையாடல்

0
திருநெல்வேலி - பிப் - 25 , 2021 மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றிய நெல்லை காவல் துணை ஆணையாளர்...

குடிசை வாழ் குழந்தைகளின் திறனை மேம்படுத்த சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் ஆர்வம்

0
சென்னை - பிப் - 25 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை...

தற்போதைய செய்திகள்