74.8 F
Tirunelveli
Friday, February 26, 2021
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தில் பிரதான சாலையை பொதுமக்கள் நலன் கருதி சீர்செய்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

மேட்டுப்பாளையத்தில் பிரதான சாலையை பொதுமக்கள் நலன் கருதி சீர்செய்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

கோயம்புத்தூர் – ஜன – 15 , 2021

மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான தேசிய நெடுஞ்சாலையான ஊட்டி ரோட்டில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் சக்கரவர்த்தி ஜங்ஷன் அருகில் மழையினால் சாலை சேதமடைந்து பெருங்குடி காரணமாக போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வந்தது.

பல நாட்களாக நெடுஞ்சாலைத்துறையும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வந்தது.

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு வழிகாட்டுதலின் படி,
மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் உத்தரவின் பேரில், காவல்துறை ஆய்வாளர் சிவகுமார் மேற்பார்வையில்

இன்று மேட்டுப்பாளையம் காவல் உட்கோட்டம் சக்கரவர்த்தி ஜங்ஷன் அருகில் மழையினால் சேதம் ஏற்பட்டு போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தால், பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் சிறப்பு உதவி ஆய்வாளர் கிறிஸ்டோபர் அவர்கள் மற்றும் முதல்நிலைக்காவலர் 418 தங்கராஜ் ஆகியோர் மேற்படி சாலையில் பள்ளம் காங்கிரட்டால் சரி செய்யப்பட்டது..

வாகன ஓட்டிகள் மற்றும் மேட்டுப்பாளையம் பொதுமக்கள் மேட்டுப்பாளையம் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினார்கள்.பொதுமக்கள் நலனில் பெரும் அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு மேட்டுப்பாளையம் காவல்துறை ஆய்வாளர் ஆகியோருக்கு மேட்டுப்பாளையத்தின் சமூக ஆர்வலர்கள் நன்றிகளை தெரிவித்தனர்.

17,007FansLike
19FollowersFollow
341SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 19 பேருக்கு...

தூத்துக்குடியில் சாலைவிபத்து குறித்து தகவல் சேகரிக்கும் இனையதள பயிற்சி வகுப்பு மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய...

சலவை தொழிலாளியின் நேர்மையை கண்டு வியந்து சேலம் போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து...

0
சேலம் - பிப் - 25 ,2021 சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில்...

மாணவ மாணவிகளிடம் நெல்லை துணை கமிஷ்னர் கலந்துரையாடல்

0
திருநெல்வேலி - பிப் - 25 , 2021 மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றிய நெல்லை காவல் துணை ஆணையாளர்...

குடிசை வாழ் குழந்தைகளின் திறனை மேம்படுத்த சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் ஆர்வம்

0
சென்னை - பிப் - 25 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை...

தற்போதைய செய்திகள்