திருச்சி – ஜன – 14 , 2021
நமது நிருபர் : முனைவர் மிர்ஷா
சாதி மதங்களை கடந்து சமத்துவ பொங்கலை கொண்டாடி, கிராம விழிப்புணர்வு காவல் அலுவலரை அறிமுகப்படுத்தி கிராம மக்களிடையே உள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை களையெடுக்கும் – காவல்துறை சிறப்பு இயக்குனர் அவர்கள்
இன்று காவல்துறை சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் தலைமையில், திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா முன்னிலையில், இலால்குடி காவல் உட்கோட்ட சிறுகனூர் கிராமப்பகுதியில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலரை அறிமுக விழாவினை தொடங்கி, சாதி மதங்களைக் கடந்து அனைத்து மதத்தினரும் கலந்துகொண்ட சமத்துவ பொங்கலை விழாவினை சக காவலருடன் கொண்டாடி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்.
கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் பணியானது கிராமத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உரிய நேரத்தில் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு குறைந்தபட்சம் மாதத்திற்கு இரண்டு முறையாவது நேரில் சென்று பார்வையிட வேண்டும்.காவல்துறையின் பணியானது கடைக்கோடியில் இருக்கும் கிராம மக்களையும் போய் சேர வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் என்று சிறப்பு டி.ஜி.பி தெரிவித்தார்