சென்னை – ஜன – 14 ,2021
நமது நிருபர் – ஹெச்.எம்.ரிஸ்வான்
தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பணியின்போது இறந்தால், அவரது மனைவி அல்லது குழந்தைகளாகிய வாரிசுகளுக்கு தமிழக அரசு கருணை அடிப்படையில் கல்வி தகுதிக்கேற்ப பணி நியமனம் வழங்குகின்றது. இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இறந்த காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளில் கல்வி தகுதிக்கேற்ப 270 நபர்களுக்கு கருணை அடிப்படையில் கணினி விவர உதவியாளர் பதவிக்கான பணி நியமனம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்பேரில், தேர்ந்தெடுக்கப்பட்ட இறந்துபோன காவல்துறையினரின் 270 வாரிசுகளுக்கு கணினி விவர உதவியாளர் பதவிக்கான பணி நியமன ஆணையை, சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் இன்று காவல் ஆணையரகத்தில் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர தலைமையிட போலீஸ் கூடுதல் கமிஷ்னர் அமல்ராஜ், கிழக்கு மண்டல இணை கமிஷ்னர் சுதாகர், நிர்வாக துணை கமிஷ்னர் பெரோஸ்கான் அப்துலலா, காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.