74.8 F
Tirunelveli
Friday, February 26, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பேரிடர் மீட்புகுழு தயார் நிலையில் மாவட்ட எஸ்.பி...

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பேரிடர் மீட்புகுழு தயார் நிலையில் மாவட்ட எஸ்.பி தகவல்

தூத்துக்குடி – ஜன – 14 ,2021

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையை முன்னிட்டு வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போது ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு தூத்துக்குடி மாவட்த்தின் முக்கிய இடங்களில் அவசர கால பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர் – வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி தொடர் மழை, வெள்ளம் மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிப்பு நேரிட்டால் ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மாநில பேரிடர் மீட்பு படை பயிற்சி பெற்ற காவலர்கள் அடங்கிய குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு குழுவிலும் பேரிடர் மீட்பு படை பயிற்சி பெற்ற வீரர்கள் தலைமையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர், தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அந்தந்த பகுதிகளை நன்கு தெரிந்த மற்றும் நீர், நிலைகள் பற்றி தெரிந்த உள்ளுர் காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இந்த பேரிடர் மீட்பு படையில் காற்றடைத்து இயந்திர விசையுடன் செல்லக்கூடிய படகுகள், காற்றடைத்து வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் வலுவான தூக்குப்படுக்கைகள் , முதலுதவி பெட்டி, ஒளிரும் சட்டைகள், பாதுகாப்புச் சட்டை, கடப்பாறை, மண்வெட்டி, அரிவாள், நைலான் கயிறு, பாதுகாப்பு தலைக்கவசம், மரம் அறுக்கும் இயந்திரம், ஒலி பெருக்கி உட்பட 24 வகை உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வெள்ள பாதிப்ப ஏற்படக்கூடிய அனைத்துப் பகுதிகளுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்து காவல் துணை போலீஸ் சூப்பிரண்டு காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் அனைவருக்கும் ஆலோசனை கூறிவருகிறார்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு உதவுவதற்கு காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என்றும் பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறை தொலை பேசி எண். 100 அல்லது குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ் ஆப் வசதியுடன் கூடிய ‘ஹலோ போலீஸ்’ 95141 44100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

17,007FansLike
19FollowersFollow
341SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 19 பேருக்கு...

தூத்துக்குடியில் சாலைவிபத்து குறித்து தகவல் சேகரிக்கும் இனையதள பயிற்சி வகுப்பு மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய...

சலவை தொழிலாளியின் நேர்மையை கண்டு வியந்து சேலம் போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து...

0
சேலம் - பிப் - 25 ,2021 சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில்...

மாணவ மாணவிகளிடம் நெல்லை துணை கமிஷ்னர் கலந்துரையாடல்

0
திருநெல்வேலி - பிப் - 25 , 2021 மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றிய நெல்லை காவல் துணை ஆணையாளர்...

குடிசை வாழ் குழந்தைகளின் திறனை மேம்படுத்த சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் ஆர்வம்

0
சென்னை - பிப் - 25 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை...

தற்போதைய செய்திகள்