74.8 F
Tirunelveli
Friday, February 26, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடியில் ஆதறவற்ற முதியோருடன் பொங்கல் விழா கொண்டாடிய எஸ்.பி

தூத்துக்குடியில் ஆதறவற்ற முதியோருடன் பொங்கல் விழா கொண்டாடிய எஸ்.பி

தூத்துக்குடி – ஜன- 14 , 2021

தூத்துக்குடி மாவட்டம் கூட்டாமபுளியில் உள்ள ‘அன்பு உள்ளங்கள்” என்ற இல்லத்தில் உள்ள ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோர்;, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் ஆகியோருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் சமத்துவ பொங்கலிட்டு அனைவருக்கும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டாம்புளி அன்னை தெரஸா நகரில் ‘அன்பு உள்ளங்கள்” என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 96 பேர், மாற்றுத்திறனாளிகள் 10 பேர், முதியோர்கள் 16, கணவனால் கைவிடப்பட்டவர்கள் 13 பேர் உட்பட 150க்கும் மேற்பட்ட ஆதவற்றோர்கள் உள்ளனர்.

இதையறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தமிழர் திருநாளான இன்று தைப்பொங்கல் விழாவை மேற்படி ‘அன்பு உள்ளங்கள்” ஆதரவற்றோர் இல்லத்தில் அவர்களுடன் இணைந்து கொண்டாட முடிவு செய்து சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கலிட்டு கொண்டாடினார். பின் அவர்களுடன் ஆறுதலான வார்த்தைகள் கூறி கனிவுடன் உரையாடி அங்கிருந்த ஆதரவற்றோர் 166 பேருக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கி பொங்கல் வாழ்த்துக்கூறினார்.

இந்த ஆதவரற்றோர் இல்ல நிர்வாகி விஜயா சத்யா சாமுவேல், நிர்வாக உதவியாளர் தீபா, சமூகப்பணியாளர்கள் மார்ட்டின் மற்றும் சுரேஷ், வார்டன்கள் அமல்ராஜ், பிரவீன், கீதா மற்றும் திருமதி செண்பகம், செவிலியர்கள் சாரதா மற்றும் . சத்யா உள்ளிட்ட காப்பகத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், புதுக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஞானராஜன், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகரஜன், புதுக்கோட்டை தனிப்பிரிவு காவலர் சாமிக்கண்ணு ஆகியோர் உடனிருந்து இப்பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

17,007FansLike
19FollowersFollow
341SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 19 பேருக்கு...

தூத்துக்குடியில் சாலைவிபத்து குறித்து தகவல் சேகரிக்கும் இனையதள பயிற்சி வகுப்பு மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய...

சலவை தொழிலாளியின் நேர்மையை கண்டு வியந்து சேலம் போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து...

0
சேலம் - பிப் - 25 ,2021 சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில்...

மாணவ மாணவிகளிடம் நெல்லை துணை கமிஷ்னர் கலந்துரையாடல்

0
திருநெல்வேலி - பிப் - 25 , 2021 மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றிய நெல்லை காவல் துணை ஆணையாளர்...

குடிசை வாழ் குழந்தைகளின் திறனை மேம்படுத்த சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் ஆர்வம்

0
சென்னை - பிப் - 25 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை...

தற்போதைய செய்திகள்