திருநெல்வேலி – ஜன – 13 , 2021
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்களுடன் இணைந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படையைச் காவலர்களுடன் இணைந்து இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் குத்துவிளக்கேற்றி, பொங்கல் பானைக்கு தீபம் ஏற்றி பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். பின் ஆயுதப்படை காவலர்களுடன் இணைந்து உறியடி (பானை உடைத்தல்) விளையாட்டிலும் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து ஆயுதப்படை காவலர்கள் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் இனிப்பு வழங்கினார். பின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, அதில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிறப்புரையாற்றினார், அப்போது அவர் கூறியதாவது, ஆயுதப்படையில் உங்களுடன் இந்த பொங்கல் விழா கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, பொங்கல் விழா அனைத்து சமுதாயத்தினரும் விரும்பிக்கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும் எனவும் பின் அனைத்து காவலர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் இருந்து சட்டம் ஒழுங்கு காவல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட 165 காவலர்களுக்கு சிறப்பாகப் பணிபுரிய வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜூ, ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சிசில், ஆயுதப்படை ஆய்வாளர் திரு மகேஸ்வரி ஆகியோர் மற்றும் உதவி ஆய்வாளர்கள்,காவலர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தார்கள் கலந்து கொண்டனர்.