கன்னியாகுமரி – ஜன – 13 , 2021
கன்னியாகுமரி மாவட்டம், இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலந்து கொண்டார். மேலும் அனைத்து மத தலைவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள், மற்றும் அலுவலக அமைச்சு பணியாளர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து வண்ணக்கோலமிட்டு, சிறப்பாக பொங்கலிட்டு சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.