மதுரை – ஜன – 13,2021
மதுரை மாநகர போலீஸ் ஷ உதவி போலீஸ் கமிஷ்னர் சூரகுமாரன் தலைமையில் இன்று மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மாநகர துணை கமிஷ்னர் சிவ பிரசாத் கலந்து கொண்டு சிறப்பித்தார்.மேலும் எஸ்டிபிஐ கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.