74.7 F
Tirunelveli
Saturday, January 16, 2021
முகப்பு தமிழ்நாடு போகி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி காவல் நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளில் சுத்தம் செய்யும் பணிகளை மாவட்ட...

போகி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி காவல் நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளில் சுத்தம் செய்யும் பணிகளை மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு

தூத்துக்குடி – ஜன – 13,2021

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று போகிப்பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது – மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ் . ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று போகிப்பபண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், காவலர் குடியிப்புகள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தார்.

உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் தலைமையில் காவலர்கள் இன்று தேவையில்லாதவற்றை கழித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு சுத்தம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பல்வேறு காவல் நிலையங்களுக்கு சென்று காவல் நிலையங்கள் மற்றும் அதன் குடியிருப்புகளை சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதாக என்பது ஆய்வு செய்து வருகிறார். இன்று காலை தூத்துக்குடி மத்தியபாகம் காவலர் குடியிருப்புகளுக்கு சென்று பார்வையிட்டு, தேவையில்லாதவற்றை அகற்றவும், சுத்தமாக வைக்கவும், காலியாக உள்ள நிலப்பரப்புகளில் மரங்கள் நட்டு வளர்க்கவும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆயவின்போது தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், வடபாகம் காவல் ஆய்வாளர் அருள், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், தூத்துக்குடி தென்பாகம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரேமா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

17,007FansLike
19FollowersFollow
327SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னையில் திருநங்கைளுடன் பொங்கல் விழா கொண்டாடிய போலீஸ் கமிஷ்னர்

0
சென்னை - ஜன - 15 ,2021 நமது நிருபர் :ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர போலீஸ்...

தருமபுரி மாவட்ட எஸ்.பி தலைமையில் சமத்துவபொங்கல் விழா கொண்டாடப்பட்டது

0
தருமபுரி - ஜன - 15 , 2021 தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஸ்குமார் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சமத்துவ பொங்கல்...

சின்னசேலம் அருகில் 1365 லிட்டர் கள்ளசாரயம் கண்டுபிடிப்பு தனிப்படையினருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

0
கள்ளக்குறிச்சி - ஜன - 15 , 2021 போலீஸ் மீடியா தமிழ் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கள்ளக்குறிச்சி...

மேட்டுப்பாளையத்தில் பிரதான சாலையை பொதுமக்கள் நலன் கருதி சீர்செய்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
கோயம்புத்தூர் - ஜன - 15 , 2021 போலீஸ் மீடியா தமிழ் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான தேசிய நெடுஞ்சாலையான ஊட்டி...

தற்போதைய செய்திகள்