தூத்துக்குடி – ஜன – 23 , 2021
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி லாயல் மில் காலணியைச் சேர்ந்த தம்பதியினர் பிரபு(37) மனைவி உமா மகேஷ்வரி(30) ஆவர். இவர்களுக்கு கடந்த எட்டு வருடத்திற்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. பிரபு அடிக்கடி மதுஅருந்திவிட்டு மனைவி உமா மகேஷ்வரியிடம் தகராறு செய்து, கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் உமா மகேஷ்வரி பிரபுவை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளார். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். அவரது உத்தரவின் பேரில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக் கதிரவன் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் ஆய்வாளர் சுதேசன் தலைமையிலான காவல்துறையினர் கணவரை கொலை செய்த உமா மகேஷ்வரியை உடனடியாக கைது செய்தனர்.