86 F
Tirunelveli
Friday, February 26, 2021
முகப்பு தமிழ்நாடு 32 - வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம்...

32 – வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி புதிய முயற்சி

திருநெல்வேலி – ஜன – 23 , 2021

ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17 வரை 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது
இதனையடுத்து திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சாலை பாதுகாப்பு குறித்து அனைத்து உட்கோட்டங்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் தினமும் விழிப்புணர்வு தொடர்ந்து மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று திருநெல்வேலி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா அறிவுரையின்படி ஊரக உட்கோட்ட பகுதியில் உள்ள காவல் நிலையங்கள் சார்பில்பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் வாகன ஓட்டிகளுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது நாட்டுப்புற கலைகள் மயிலாட்டம், கரகாட்டம் அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் சாலை விழிப்புணர்வு குறித்து பதாதைகளை ஏந்தி பேரணியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

பின் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாரதா கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் வைத்து பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாற்கர சாலையில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்து பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் என்று விழிப்புணர்வை காவல்துறையினர் ஏற்படுத்தினார்கள். மேலும் சாரதா கல்லூரி பெண்கள் வாகன ஓட்டிகளுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந் நிகழ்ச்சியில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஊரக மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாககுமாரி மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

17,007FansLike
19FollowersFollow
341SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 19 பேருக்கு...

தூத்துக்குடியில் சாலைவிபத்து குறித்து தகவல் சேகரிக்கும் இனையதள பயிற்சி வகுப்பு மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய...

சலவை தொழிலாளியின் நேர்மையை கண்டு வியந்து சேலம் போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து...

0
சேலம் - பிப் - 25 ,2021 சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில்...

மாணவ மாணவிகளிடம் நெல்லை துணை கமிஷ்னர் கலந்துரையாடல்

0
திருநெல்வேலி - பிப் - 25 , 2021 மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றிய நெல்லை காவல் துணை ஆணையாளர்...

குடிசை வாழ் குழந்தைகளின் திறனை மேம்படுத்த சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் ஆர்வம்

0
சென்னை - பிப் - 25 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை...

தற்போதைய செய்திகள்