86 F
Tirunelveli
Friday, February 26, 2021
முகப்பு தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனமான கியூப் நிறுவனத்தின் சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட எஸ்.பி...

தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனமான கியூப் நிறுவனத்தின் சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட எஸ்.பி தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி – ஜன – 23 , 2021

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் தேசிய நெடுஞ்சாலையின் கியூப் எனும் நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தின் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்சி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்‌.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இன்று தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் தேசிய நெடுஞ்சாலையின்; கியூப் எனும் நெடுஞ்சாலை ஒப்பந்த தனியார் நிறுவனத்தின் சார்பாக கயத்தாறு சுங்கச் சாவடி அருகே நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் தேசிய நெடுஞ்சாலை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகம் அடங்கிய கொடியை ஏற்றினார். பின்னர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வாக தலைக்கவசம் அணிதல் மற்றும் சீட்பெல்ட் அணிவதின் முக்கியத்துவம் பற்றியும், இந்த சுங்கச் சாவடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய ஒலிப்பதிவை ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலையின் கியூப் என்னும் ஒப்பந்த நிறுவனத்தின் நிர்வாகி லோகநாதன், மேலாளர். சிவகுமார், மற்றும் அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு . கலைக் கதிரவன், கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து, உதவி ஆய்வாளர்கள் அரிகண்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

17,007FansLike
19FollowersFollow
341SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 19 பேருக்கு...

தூத்துக்குடியில் சாலைவிபத்து குறித்து தகவல் சேகரிக்கும் இனையதள பயிற்சி வகுப்பு மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய...

சலவை தொழிலாளியின் நேர்மையை கண்டு வியந்து சேலம் போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து...

0
சேலம் - பிப் - 25 ,2021 சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில்...

மாணவ மாணவிகளிடம் நெல்லை துணை கமிஷ்னர் கலந்துரையாடல்

0
திருநெல்வேலி - பிப் - 25 , 2021 மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றிய நெல்லை காவல் துணை ஆணையாளர்...

குடிசை வாழ் குழந்தைகளின் திறனை மேம்படுத்த சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் ஆர்வம்

0
சென்னை - பிப் - 25 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை...

தற்போதைய செய்திகள்