86 F
Tirunelveli
Friday, February 26, 2021
முகப்பு தமிழ்நாடு கோவில்பட்டியில் சாலைவிதிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த இருசக்கர வாகண பேரணியை மாவட்ட எஸ்.பி இன்று‌...

கோவில்பட்டியில் சாலைவிதிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த இருசக்கர வாகண பேரணியை மாவட்ட எஸ்.பி இன்று‌ துவக்கிவைத்தார்

தூத்துக்குடி – ஜன – 23 , 2021

32வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் காவல்துறை சார்பாக நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஜனவரி மாதம் 18 முதல் பிப்ரவரி 17 வரை 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த சாலை பாதுகாப்பு மாதத்தில் சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சாலை விபத்துக்களை குறைப்பதே இதன் நோக்கமாகும். அதன்படி கடந்த 18 முதல் தினந்தோறும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இன்று கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வாக தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறையினர் மற்றும் கோவில்பட்டி நேஷனல் இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்ட தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் விழிப்புணர்வு பேரணி கோவில்பட்டி காந்தி மைதானத்தில் புறப்பட்டு கதிரேசன் கோவில் ரோடு, பார்க் ரோடு. மெயின்ரோடு வழியாக காந்தி மைதானத்தில் சென்று நிறைவடைந்தது.இந்த விழிப்புணர்வு பேரணியை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் மற்றும் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் நாராயணன், கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர்கலந்து கொண்டனர்.

17,007FansLike
19FollowersFollow
341SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 19 பேருக்கு...

தூத்துக்குடியில் சாலைவிபத்து குறித்து தகவல் சேகரிக்கும் இனையதள பயிற்சி வகுப்பு மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய...

சலவை தொழிலாளியின் நேர்மையை கண்டு வியந்து சேலம் போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து...

0
சேலம் - பிப் - 25 ,2021 சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில்...

மாணவ மாணவிகளிடம் நெல்லை துணை கமிஷ்னர் கலந்துரையாடல்

0
திருநெல்வேலி - பிப் - 25 , 2021 மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றிய நெல்லை காவல் துணை ஆணையாளர்...

குடிசை வாழ் குழந்தைகளின் திறனை மேம்படுத்த சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் ஆர்வம்

0
சென்னை - பிப் - 25 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை...

தற்போதைய செய்திகள்