திருநெல்வேலி – ஜன – 23 , 2021
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலை நகர் பகுதியைச் சேர்ந்த 15 நபர்கள் சீவலப்பேரி பகுதியிலுள்ள கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளனர். அப்போது அனைவரும் சீவலப்பேரி ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக சிறுவர்கள் கௌதம் மற்றும் கௌசிக் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த முத்தையா அவர்கள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இரு சிறுவர்களையும் தண்ணீரில் இறங்கி காப்பாற்றினார். இதனை அறிந்த திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் முத்தையா கௌரவிக்கும் விதமாக நேரில் அழைத்து வெகுமதி வழங்கினார். மேலும் முத்தையா அவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சார்பாக உளமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.