திருச்சி – ஜன – 23 , 2021
நமதுநிருபர்

புகைப்படங்கள் : எஸ்.எம்.பாரூக்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க திருச்ச்சி சரக டி.ஐ.ஜி.ஆனிவிஜயா தலைமையில் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷின் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து திருச்சி அரியலூர் பெரம்பலூர் கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான குற்றங்களை தடுக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியதுடன் ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உயரிய நோக்கத்துடன் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருவதுடன் இன்று திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனிவிஜயா தலைமையில் 10 ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இலவசமாக தையல் இயந்திரங்களை வழங்கி உதவினார் மேலும் சிறப்பாக பணி புரிந்த காவல் ஆய்வாளர்கள் பணியை சிறப்பிக்கும் வண்ணம் விருதுகள் வழங்கி கவுரவித்தார் இந்நிகழ்ச்சியில் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் சென்னை அறக்கட்டளை இயக்குனர் முனைவர் தேவசித்தம் அவர்கள் முன்னிலை வகித்தார் மேலும் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டு கௌரவித்தனர்..