சென்னை – ஜன – 22 , 2021
நமது நிருபர்

போலீஸ் மீடியா தமிழ் போலீஸ் மீடியா தமிழ் போலீஸ் மீடியா தமிழ் போலீஸ் மீடியா தமிழ்
புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் கேண்டீனில் சுமார் ரூ.17 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாடலர் கிச்சன் ஐ சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர்களுக்கான உணவகத்தை சில மாதங்களுக்கு முன் பார்வையிட்டு, காவலர்களிடம் கலந்து ஆலோசித்த போது, காவலர்கள் மாடலர் கிச்சன் அமைக்க வேண்டுகோள் விடுத்தனர். காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு போலீஸ் கமிஷ்னரின் உத்தரவின்பேரில், உடனடியாக சென்னை பெருநகர தலைமையிட கூடுதல் கமிஷ்னர் அமல்ராஜ், நேரடி கண்காணிப்பில், இணை கமிஷ்னர் தலைமையிடம், மற்றும் துணை கமிஷ்னர்கள் மேற்பார்வையில் சிறப்பாக ரூ.17,32,296 செலவில் புதிதாக மாடலர் கிச்சன் வடிவமைக்கப்பட்டது.
இன்று சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மாடலர் கிச்சன் காவலர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் ஆயுதப்படை ஆண் மற்றும் பெண் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் தலைமையிட கூடுதல் கமிஷ்னர் ம அமல்ராஜ், தெற்கு பகுதி இணை கமிஷ்னர் பாபு, தலைமையிட துனை கமிஷ்னர் மல்லிகா, துணை கமிஷ்னர்கள் சௌந்தராஜன், (ஆயுதப்படை-1) ரவிச்சந்திரன் (ஆயுதப்படை-2) கோபால் (மோட்டார் வாகனப்பிரிவு) காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.