திருச்சி – ஜன – 22 , 2021
நமதுநிருபர்

புகைப்படங்கள் – எஸ்.எம் பாரூக்
இன்று திருச்சி மாநகர ஆயுதப்படை திருமண மண்டபத்தில் ஆன்லைன் பண பரிமாற்றம், கிரெடிட்கார்ட் மற்றும் டெபிட் கார்ட் மோசடி குறித்த விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு காவல் அதிகாரிகளுக்கு நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பை திருச்சி மாநகர போலீஸ் கமிஷ்னர் லோகநாதன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார் , திருச்சி மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கமிஷ்னர் பவன்குமார் ரெட்டி மற்றும் திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை கமிஷ்னர் வேதரத்தினம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மேலும் எச்டிஎஃப்சி வங்கியின் மண்டல தலைவர், மேலாளர் – புலன் விசாரணை மற்றும் வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சி வகுப்பில் உதவி கமிஷ்னர்கள் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சியில் புலன் விசாரணை அதிகாரிகள் மேற்கண்ட மோசடிகள் சம்பந்தமாக வங்கியை அணுகுவது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முறைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் வங்கிக்கணக்கில் செய்யப்படும் மோசடி குறித்த பயனுள்ள தகவல்கள் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு வங்கி மேலாளர்கள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.