86 F
Tirunelveli
Friday, February 26, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடியில் சாலைபாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு பொதுமக்களிடம் உறுதிமொழி கையெழுத்துபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட...

தூத்துக்குடியில் சாலைபாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு பொதுமக்களிடம் உறுதிமொழி கையெழுத்துபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட எஸ்.பி இன்று துவக்கி வைத்தார்

தூத்துக்குடி – ஜன – 22 , 2021

32வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு தூத்துக்குடி காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பாக வாகன ஓட்டுனர்களிடம் சாலை விதிகளை மதித்து நடப்போம் என உறுதிமொழியேற்று கையெழுத்திடும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் முதல் கையொப்பமிட்டு துவக்கி வைத்தார்.

இந்த மாதம் 18. முதல் பிப்ரவரி 17வரை 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த சாலை பாதுகாப்பு மாதத்தில் சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விழப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்தி சாலை விபத்துக்களை குறைப்பதே இதன் நோக்கமாகும். அதன்படி கடந்த 18ம்தேதி முதல் தினம் தோறும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இன்று சாலை பாதுகாப்பு மாதத்தின் 5வது நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்த 5வது நாளான இன்று தூத்துக்குடி நகர காவல்துறை போக்குவரத்து பிரிவு மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஓட்டுபவர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் “எனது வாழ்நாள் முழுவதும் சாலை விதிகளை மதித்தும், எனக்கோ என்னால் பிறருக்கோ, விபத்து ஏற்படுத்தாதவாறு வாகனம் ஓட்டுவேன் என்றும், இனிவரும் சந்ததிகளுக்கு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும் உறுதிமொழியேற்று வாகன ஓட்டிகள் கையெழுத்திடும் நூதன சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும்பெருமாள் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி திரு. விநாயகம் ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு.எஸ்.ஜெயக்குமார்‌ உறுதிமொழியேற்று முதல் கையொப்பமிட்டு துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அதிகாரி விநாயகம், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஷன் மாசிலாமணி, குமார், திருச்செந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன், உதவி ஆய்வாளர்கள் வெங்கடேசன், பென்சன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

17,007FansLike
19FollowersFollow
341SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 19 பேருக்கு...

தூத்துக்குடியில் சாலைவிபத்து குறித்து தகவல் சேகரிக்கும் இனையதள பயிற்சி வகுப்பு மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய...

சலவை தொழிலாளியின் நேர்மையை கண்டு வியந்து சேலம் போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து...

0
சேலம் - பிப் - 25 ,2021 சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில்...

மாணவ மாணவிகளிடம் நெல்லை துணை கமிஷ்னர் கலந்துரையாடல்

0
திருநெல்வேலி - பிப் - 25 , 2021 மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றிய நெல்லை காவல் துணை ஆணையாளர்...

குடிசை வாழ் குழந்தைகளின் திறனை மேம்படுத்த சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் ஆர்வம்

0
சென்னை - பிப் - 25 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை...

தற்போதைய செய்திகள்