78.8 F
Tirunelveli
Thursday, April 15, 2021
முகப்பு தமிழ்நாடு காவலர்கள் கடவுளுக்கு இணையானவர்கள் மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம் புகழாரம் தேர்வு செய்யப்பட்ட காவலர்...

காவலர்கள் கடவுளுக்கு இணையானவர்கள் மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம் புகழாரம் தேர்வு செய்யப்பட்ட காவலர் பயிற்சி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை

திருச்சி – டிச : 02

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

நேர்மை தவறாமல் நீதி வழுவாமல் கருணையோடுபணியில் ஈடுபடும் ஒவ்வொரு போலீசாரும் கடவுள்தான் என்று மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம் பேசினார்.

புதிதாக தேர்வுசெய்யப்பட்ட காவலர்களின் பயிற்சி நிறைவு விழா திருச்சி தற்காலிக பயிற்சி மைதானத்தில் நேற்று நடந்தது.விழாவில் மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம் கலந்துகொண்டுஅணிவகுப்பு மரியாதையை ஏற்று பேசியது: காவல் பணியில் சேர்ந்திருக்கும் பெரும்பாலானவர்கள் கிராமங்களில் இருந்து வந்தவர்கள் உங்களின் பெற்றோர் விவசாயம் உள்ளிட்ட பல வேலைகளை கஷ்டப்பட்டு செய்தவர்கள்..

உங்கள் ஒவ்வொருவருக்கும் ஏழைகளின் கஷ்டங்கள் புரியும்.உங்களுக்கு அரசுப் பணி கிடைத்துள்ளது.இந்த பயிற்சிக்குப் பிறகு நீங்கள் பொதுமக்களோடு பணிபுரிவீர்கள்.ஏழைகள் காவல் நிலையங்களுக்கு பிரச்சனையோடு வரும்போது உபசரிப்பு மிகவும் முக்கியம்.கஷ்டத்தை கூற வருபவர்களுக்கு காவல்நிலையத்தில் அமரவைத்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி அவர்களுக்கு நேர்மையாக பணியாற்றுங்கள்.

தமிழகத்தில் ஒருலட்சம் போலீசார் உள்ளனர்.பணியின்போது நேர்மையாகவும்,நன்றிஉணர்வோடும் பணியாற்ற வேண்டும்.ஒருகாலத்தில் திருட்டு சம்பவங்கள் நடந்தால் அருகே உள்ள மந்திரவாதிகளிடம் சென்று வெற்றிலையில் மை போட்டு பார்க்கும் வழக்கம் போலீசார் மத்தியிலேயே இருந்தது.தற்போது உங்களுக்கு நவீன பயிற்சிகள் தரப்பட்டுள்ளது.

இப்போது பயிற்சி முடிந்த ஒருவருக்கூட தொப்பை இல்லை.பணிகாலம் முடியும்வரை தொப்பை வராமல் உடல்நலத்தை சிறப்பாக பேணி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது.இந்த சம்பளமே வாழ்க்கையை சிறப்பாக நடத்த போதுமானது.பணியின் போது தீய சிந்தனைகள் வராமல் பார்த்துக்கொண்டு நேர்மையோடு பணி செய்ய வேண்டும்.

நேர்மை தவறாமல்,நீதி வழுவாமல் பணியில் ஈடுபடும் நீங்கள் ஒவ்வொருவரும் கடவுள் என்று உங்களை நீங்களே நினைத்துக்கொள்ளுங்கள்.இதுவே உங்கள் வேலையில் தர்மமாக இருக்கட்டும் என்றார்.

நிகழ்ச்சியில் திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனிவிஜயா, முதல் அணி கமாண்டண்ட் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

19,735FansLike
29FollowersFollow
345SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை திருவல்லிக்கேணி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற வியாபாரிகளுடான‌ கொரனா விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் போலீஸ்...

0
சென்னை - ஏப்ரல் - 13 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான்‌ இன்று மாலை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதான வளாகத்தில் திருவல்லிக்கேணி மாவட்ட வர்த்தகர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புடன் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக...

அரியலூர் மாவட்ட எஸ்.பி தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்...

0
அரியலூர் - ஏப்ரல் - 13 ,2021 அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் முன்னிலையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று சாலை பாதுகாப்பு மற்றும்...

பணியின்போது உயிர் நீத்த 3 காவலர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் முதல்வர் நிவாரண...

0
தென்காசி - ஏப்ரல் - 13 ,2021 தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலையத்தில் பணியின் போது உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் வேலையா, சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளர்...

சென்னை தி.நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொரனா தடுப்பு விழிப்புணர்வு...

0
சென்னை - ஏப்ரல் - 14 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் இன்று காலை தியாகராயநகரில் தியாகராய ரோடு டாக்டர் தாமஸ் ரோடு அருகில் உள்ள...

சென்னை மாநரம் முழுவதும் போலீஸ் கமிஷ்னர் உத்தரவின்பேரில் கொரனா தடுப்பு விதிமுறைகள் ...

0
சென்னை - ஏப்ரல் - 13 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் , உத்தரவுபடி போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு...

தற்போதைய செய்திகள்