86 F
Tirunelveli
Monday, November 30, 2020
முகப்பு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசாரின் பொறியில் சிக்கிய மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பெருமாள் சுற்றி...

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் பொறியில் சிக்கிய மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பெருமாள் சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்புத் துறை துணை சூப்பிரண்டு மதியழகன் லஞ்சத்தில் புரளும் மார்த்தாண்டம் ஆர்டிஒ அலுவலகம்

கன்னியாகுமரி – நவ :21

லஞ்சப் பணத்தில் பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுக்களாகவே இருந்தன. இதைத் தொடர்ந்து அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் ஆய்வாளர் பெருமாள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் கோழிப்போர்விளையில் செயல்பட்டு வருகிறது. இங்கு வாகனங்கள் பதிவு செய்வது, வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் என அனைத்திற்கும் லஞ்சம் கொடுத்தால்தான் நடக்கும் என்ற நிலை உள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் கோழிப்போர்விளையில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது சிலர் காம்பவுண்ட் சுவரில் ஏறிக் குதித்து தப்பி ஓடினர். சிலர் தங்கள் கையில் இருந்த பணத்தை அங்கு போட்டுவிட்டு ஓடினர். அங்கிருந்த ஒரு புரோக்கரிடம் இருந்து மட்டும் ரூ.57,000 கைப்பற்றப்பட்டது. மேலும் ரெய்டின் முடிவில் கணக்கில் வராத ரூ.86,590 கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் லஞ்சப் பணத்தை வீட்டுக்கு கொண்டு செல்லும் வழியில் வாகன ஆய்வாளரிடம் ரூ.1.69 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளது நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புத்துறை.

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலக வாகன ஆய்வாளராக இருப்பவர் பெருமாள். இவர் வாகன பதிவு போன்றவைகளுக்கு லஞ்சமாக பணம் வசூல் செய்ததாகவும், அந்த பணத்துடன் மார்த்தாண்டத்தில் இருந்து திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருப்பதாகவும் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன் தினம் இரவு நேரத்தில் வடசேரியில் உள்ள அண்ணா சிலை முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த பெருமாளின் காரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவரது காரில் ஒரு லட்சத்து அறுபத்தி ஒன்பதாயிரம் ரூபாய் லஞ்சப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்திற்கான கணக்குகள் எதுவும் ஆய்வாளரிடம் இல்லை. லஞ்சப் பணத்தில் பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுக்களாகவே இருந்தன. இதைத் தொடர்ந்து அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் ஆய்வாளர் பெருமாள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் எதெற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலையை மாற்ற உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

17,007FansLike
18FollowersFollow
312SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

‘காவலர் நிறைவாழ்வு பயிற்சி” பட்டறையின் 3 நாட்கள் பயிற்சியின் நிறைவு நாளான இன்று தூத்துக்குடி...

0
தூத்துக்குடி - நவ :29 இப்பயிற்சியானது மன அழுத்தத்தை போக்குவதற்காக தமிழக அரசு காவல்துறையினரின் ‘காவலர் நிறை வாழ்வு பயிற்சியை...

திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில் 5 கோடி மதிப்பிலான துப்பாக்கி சுடுதளம் அமைக்கபட்டு அதற்க்கான...

0
திருச்சி - நவ : 29 செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக் திருச்சி ரைபிள் கிளப்...

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து மக்களின் பயத்தை போக்குவிதமாக மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - நவ : 29 ஸ்ரீவைகுண்டம் காவல்துறை சார்பாக, இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை...

நிவர் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வ இளைஞர்களுக்கு எஸ்.பி.ஞீ அபிநவ் பாராட்டு

0
கடலூர் - நவ : 29 கடலூர் மாவட்டத்தில்நிவர் புயலின் தாக்கத்தினால் பொதுமக்களை பாதுகாக்ககாவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர்...

இறந்த காவலரின்‌ குடும்பத்திறக்கு சககாவலர்கள் இனைந்து 24 லட்சம் நிதி உதவி

0
மதுரை - நவ : 29 2003 காவல் உதவும்கரங்கள் சொந்கடந்த 03.10.20ம்தேதிஉடல்நலக் குறைவால் மறைந்த நமது பேட்ஜ் நண்பரும் உதவும்கரங்கள் நண்பருமான பழனிவேல்நாதன் மதுரை...

தற்போதைய செய்திகள்