திருச்சி – நவ : 29
செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்
திருச்சி ரைபிள் கிளப் கடந்த 12.02.2020 அன்று உருவாக்கப்பட்டு, 24.02.2020 அன்று தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் 1975 விதி 10-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு, திருச்சி,கே. கே. நகர், மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் உலக தரத்துடன் துப்பாக்கி சுடும் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 161 ஆயுட்கால உறுப்பினர்கள் இந்த கிளப்பில் இணைந்துள்ளனர். திருச்சி மாநகர திருச்சி போலீஸ் கமிஷ்னர் லோகநாதன் தலைமையில் ஆயுட்கால உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி ரைபிள் கிளப்பின் முக்கிய நிர்வாகிகள், கட்டிட ஒப்பந்ததாரர், கட்டிட நிபுணர், நிர்வாக உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆயுட்கால உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். விண்ணப்பங்கள் மற்றும் இதர விபரங்களுக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஜமால் முகமது கல்லூரி எதிரில்அமைந்துள்ள ரைபிள் கிளப் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.