75.1 F
Tirunelveli
Saturday, January 16, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து மக்களின் பயத்தை போக்குவிதமாக மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்...

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து மக்களின் பயத்தை போக்குவிதமாக மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையின் அடையாள அனிவகுப்பு நடைபெற்றது

தூத்துக்குடி – நவ : 29

ஸ்ரீவைகுண்டம் காவல்துறை சார்பாக, இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் ஆழ்வார்திருநகரி மல்லிகை மஹாலிலும் காவல்துறை அடையாள அணிவகுப்புடன் துவக்கி வைத்தார்.

இன்று சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியில் காவல்துறை அடையாள அணிவகுப்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து தொடங்கி பேருந்து நிலையம், பெருமாள் கோவில், புதுக்குடி பாலம் வழியாக ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் வந்து நிறைவடைந்தது.

இந்த அணிவகுப்பில் ஸ்ரீவைகுண்டம் துணை சூப்பிரண்டு வெங்கடேசன், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் நிலைய 12 உதவி ஆய்வாளர்கள், 37 காவல் ஆளிநர்கள் மற்றும் 2 ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள், 62 ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் காவல்துறை சார்பாக குமரகுருபரர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் துவக்கி வைத்து, பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு அறிவுரைகள் வழங்கி காவலர் தேர்வுக்கான பயிற்சி புத்தகங்களை வழங்கினார்.

அதே போன்று ஆழ்வார்திருநகரி ஆர்.கே.ஆர் அகாடமி சார்பாக மல்லிகை மஹாலில் நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துவக்கி வைத்து காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு அறிவுரைகள் வழங்கி காவலர் தேர்வுக்கான பயிற்சி புத்தகங்களை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் ஜீன்குமார், உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், ஜெகநாதன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆர்.கே.ஆர். அகாடமி நிறுவனர் பரியேறும் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

17,007FansLike
19FollowersFollow
327SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னையில் திருநங்கைளுடன் பொங்கல் விழா கொண்டாடிய போலீஸ் கமிஷ்னர்

0
சென்னை - ஜன - 15 ,2021 நமது நிருபர் :ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர போலீஸ்...

தருமபுரி மாவட்ட எஸ்.பி தலைமையில் சமத்துவபொங்கல் விழா கொண்டாடப்பட்டது

0
தருமபுரி - ஜன - 15 , 2021 தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஸ்குமார் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சமத்துவ பொங்கல்...

சின்னசேலம் அருகில் 1365 லிட்டர் கள்ளசாரயம் கண்டுபிடிப்பு தனிப்படையினருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

0
கள்ளக்குறிச்சி - ஜன - 15 , 2021 போலீஸ் மீடியா தமிழ் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கள்ளக்குறிச்சி...

மேட்டுப்பாளையத்தில் பிரதான சாலையை பொதுமக்கள் நலன் கருதி சீர்செய்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
கோயம்புத்தூர் - ஜன - 15 , 2021 போலீஸ் மீடியா தமிழ் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான தேசிய நெடுஞ்சாலையான ஊட்டி...

தற்போதைய செய்திகள்