86 F
Tirunelveli
Monday, November 30, 2020
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேர்...

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேர் மீது ஒரே நாளில் குண்டர் சட்டம் பாய்ந்தது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை.

தூத்துக்குடி – நவ : 21

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகள் 3 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அதிரடி நடவடிக்கை.

கடந்த 20.10.2020 அன்று தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீளவிட்டான் காட்டு பகுதயில் தூத்துக்குடி மில்லர்புரம் N.G.O காலனியை சேர்ந்த கருப்பசாமி மகன் கதிரேசன் (31) என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரிகளான முத்தையாபுரம் தங்கம்மாள் புரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுந்தர்ராஜ் (28) மற்றும் அவரது நண்பர்களான முத்துக்குமார் (19), நவீன் (20), ஆரோக்கிய செல்வம் (20) ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கின் முக்கிய எதிரியான சுந்தர்ராஜ் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு.முத்து சுப்பிரமணியன் அவர்களும்,

கடந்த மாதம் 22 அன்று கயத்தார் பஜார் பகுதியில், கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த மாடசாமி மகன் ஊர்காவலன் (61) அவரது மகன் பசுபதி பாண்டியன் (20) ஆகியோர் ஒருவரிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கயத்தார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான ஊர்காவலன் மற்றும் பசுபதி பாண்டியன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்து அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் 3 எதிரிகளையும் குண்டர்; சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் முத்தையாபுரம் தங்கம்மாள் புரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுந்தர்ராஜ் 2) கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த மாடசாமி மகன் ஊர்காவலன், 3) கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த ஊர்காவலன் மகன் பசுபதி பாண்டியன் ஆகிய மூன்று நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் 3 எதிரிகளையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

17,007FansLike
18FollowersFollow
312SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

‘காவலர் நிறைவாழ்வு பயிற்சி” பட்டறையின் 3 நாட்கள் பயிற்சியின் நிறைவு நாளான இன்று தூத்துக்குடி...

0
தூத்துக்குடி - நவ :29 இப்பயிற்சியானது மன அழுத்தத்தை போக்குவதற்காக தமிழக அரசு காவல்துறையினரின் ‘காவலர் நிறை வாழ்வு பயிற்சியை...

திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில் 5 கோடி மதிப்பிலான துப்பாக்கி சுடுதளம் அமைக்கபட்டு அதற்க்கான...

0
திருச்சி - நவ : 29 செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக் திருச்சி ரைபிள் கிளப்...

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து மக்களின் பயத்தை போக்குவிதமாக மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - நவ : 29 ஸ்ரீவைகுண்டம் காவல்துறை சார்பாக, இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை...

நிவர் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வ இளைஞர்களுக்கு எஸ்.பி.ஞீ அபிநவ் பாராட்டு

0
கடலூர் - நவ : 29 கடலூர் மாவட்டத்தில்நிவர் புயலின் தாக்கத்தினால் பொதுமக்களை பாதுகாக்ககாவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர்...

இறந்த காவலரின்‌ குடும்பத்திறக்கு சககாவலர்கள் இனைந்து 24 லட்சம் நிதி உதவி

0
மதுரை - நவ : 29 2003 காவல் உதவும்கரங்கள் சொந்கடந்த 03.10.20ம்தேதிஉடல்நலக் குறைவால் மறைந்த நமது பேட்ஜ் நண்பரும் உதவும்கரங்கள் நண்பருமான பழனிவேல்நாதன் மதுரை...

தற்போதைய செய்திகள்