புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பல்வேறு சம்பவங்களால் மக்கள் அச்சுறுத்தப்பட்டு வரும் நிலையில் பொது மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகவும், குற்றவாளிகளை எச்சரிக்கும் விதமாகவும், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த காவலர் கொடி அணிவகுப்பானது புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி பழைய அரசு மருத்துவமனை, பழனியப்பா, திலகர் திடல் வழியாக புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
பின்னர் காவல்துறையினர் கவாத்து, ஆர்பாட்டத்தின் போது
மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு துணை போலீஸ் சூப்பிரண்டு காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டு அணிவகுப்பை சிறப்பாக நடத்தினார்கள்.