86 F
Tirunelveli
Monday, November 30, 2020
முகப்பு மாவட்டம் சென்னை ஆன்லைன் ரம்மிக்கு தடை: மீறினால் 6 மாதம் சிறை- அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ...

ஆன்லைன் ரம்மிக்கு தடை: மீறினால் 6 மாதம் சிறை- அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்

சென்னை – நவ : 20

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடைசெய்யும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டம் மூலம் இளைஞர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் அவல சூழ்நிலை ஏற்பட்டது. பல இளைஞர்கள் பணத்தை இழப்பதோடு, உயிர்களை மாய்த்துக் கொண்டதால் உடனடியாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்திருந்தார். அதன்படி ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு இன்று தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனால் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படுகிறது. மீறி விளையாடினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 6 மாதம் தண்டனையும் விதிக்கப்படும். ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். ஆன்லைன் மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனை தடுக்கப்படும். பணம் வைத்து விளையாடுபவர்கள், கணிணி, உபகரணங்கள் தடை செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளது.

ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டு தடை குறித்து திருநெல்வேலி துணை கமிஷ்னர் சரவணன் கூறியிருப்பதாவது ஆரம்ப முதலே திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏறப்படுத்தியுள்ளோம் கொரனாவால் ஊரடங்கு நடைமுறையில் இருந்த காலங்களில் இளைஞர் மற்றும் பொதுமக்கள் பொழுதுபோக்கிற்க்காகவும் அதிக பணம் சம்பாதித்து விடலாம் என்ற பேராசையிலும் இந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்தார்கள் நாளடைவில் அதற்க்கு அடிமையாகி தனது சேமிப்பில் உள்ள பனத்தை இழக்கும் நிலையும் அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்தது தமிழகத்தில் இதுவரையில் 13 நபர்கள் ஆண்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துள்ளனர் தற்போது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் வருவதறக்கு முன்பாக திருநெல்வேலி மாநகர மக்களை ஆன்லைன் சூதாட்டாத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உளவியல் ரீதியாக மக்களை அதன் பக்கம் செல்லாமல் தடுத்து எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுத்துவந்தோம் தற்போது நடையமுறைபடுத்தபட்டுள்ள இந்த தடை உத்தரவு சட்டம் மிக அவசியம் என்றும் இந்த சட்டத்தால் இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி அவசர சட்டமாக தமிழக அரசு நடைமுறைபடுத்தியுள்ளது பொதுமக்கள் அனைவரும் இதனை வரவேறக்க வேண்டும் என்றும் கூறினார்‌

17,007FansLike
18FollowersFollow
312SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

‘காவலர் நிறைவாழ்வு பயிற்சி” பட்டறையின் 3 நாட்கள் பயிற்சியின் நிறைவு நாளான இன்று தூத்துக்குடி...

0
தூத்துக்குடி - நவ :29 இப்பயிற்சியானது மன அழுத்தத்தை போக்குவதற்காக தமிழக அரசு காவல்துறையினரின் ‘காவலர் நிறை வாழ்வு பயிற்சியை...

திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில் 5 கோடி மதிப்பிலான துப்பாக்கி சுடுதளம் அமைக்கபட்டு அதற்க்கான...

0
திருச்சி - நவ : 29 செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக் திருச்சி ரைபிள் கிளப்...

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து மக்களின் பயத்தை போக்குவிதமாக மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - நவ : 29 ஸ்ரீவைகுண்டம் காவல்துறை சார்பாக, இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை...

நிவர் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வ இளைஞர்களுக்கு எஸ்.பி.ஞீ அபிநவ் பாராட்டு

0
கடலூர் - நவ : 29 கடலூர் மாவட்டத்தில்நிவர் புயலின் தாக்கத்தினால் பொதுமக்களை பாதுகாக்ககாவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர்...

இறந்த காவலரின்‌ குடும்பத்திறக்கு சககாவலர்கள் இனைந்து 24 லட்சம் நிதி உதவி

0
மதுரை - நவ : 29 2003 காவல் உதவும்கரங்கள் சொந்கடந்த 03.10.20ம்தேதிஉடல்நலக் குறைவால் மறைந்த நமது பேட்ஜ் நண்பரும் உதவும்கரங்கள் நண்பருமான பழனிவேல்நாதன் மதுரை...

தற்போதைய செய்திகள்