சென்னை – நவ : 29
செய்தியாளர் – ஹெச்.எம்.ரிஸ்வான்
F-3 நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக்காவலர்கள் கதிரவன், (த.கா.18515) ராமமூர்த்தி (த.கா.26088) ஆகியோர் 25.11.2020 அன்று நுங்கம்பாக்கம், கல்லூரிச்சாலையில் பணியிலிருந்த போது, நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையால் சாலையில் வடியாமால் தேங்கிய மழை நீரை தாமாகவே உபகரணங்கள் இல்லாத நிலையில் கைகளால் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ததால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி பயணித்தனர். காவல் பணிக்கு அப்பால் அர்பணிப்புடன் செயல்பட்ட போக்குவரத்து காவலர்களை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ் குமார் அகர்வால், இன்று நேரில் அழைத்து நற்சான்றிதழ்கள் வழங்கி உடனமர்ந்து தேநீர் வழங்கி உபசரித்து பாராட்டியுள்ளார்