கடலூர் – அக் : 17

கடலூர் மாவட்டம் மருதாடு கிராமத்தில்
விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன் அவர்கள் பல்உயிர் பெருக்க சிறுகாடு வளர்ப்பு மற்றும் கோவிட் 19 விழிப்புணர்வு முகாம் விழாவில்
கலந்து கொண்டு, தளர்வு பொருளாதாரத்திற்காக மட்டுமே முழுமையாக கொரோனா விலகிவிடவில்லை
என்பதை புரிந்து கொண்டு வழக்கம்போல் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் கை கழுவுதல் போன்றவைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் மேலும் விலை மதிக்க முடியாத மனித உயிரை கொரானா வைரசிடமிருந்து பாதுகாக்கவும் வலியுறுத்தியும், பின்னர் மருதாடு கிராமத்தில் மரக்கன்று நட்டு விழாவை சிறப்பித்தார்.
விழாவில் கூடுதலாக அரசு அதிகாரிகளும் வேளாண்மை படிக்கும் மாணவர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.