வேலூர் – அக் : 17

வேலூர் மாவட்ட எஸ்பி செல்வகுமார் அவர்களின் உத்தரவின் பேரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று மாவட்ட காவல் துறையினருக்கு வாராந்திர கவாத்து, ஆயுதங்களை சிறப்பாக கையாளும் முறைகள் மற்றும் தற்காப்பு கலைகள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை மாவட்ட எஸ்பி செல்வக்குமார் வேலூர் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் பயிற்சிகளை பார்வையிட்டு, காவல் வாகனங்களை தணிக்கை மேற்கொண்டு, காவலர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் குறித்து ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கினார். மேலும் காவலர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இதே போன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் உள்ள டிஎஸ்பிக்கள் தலைமையில் கவாத்து பயிற்சி மற்றும் தற்காப்பு கலைகள் குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டது.