86 F
Tirunelveli
Monday, November 30, 2020
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடியில் ஒரே நாளில் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு...

தூத்துக்குடியில் ஒரே நாளில் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி – அக் : 24

சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரவுடித்தனம் செய்த பல கொலை, கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 5 பேர் மற்றும் வடபாகம் காவல் நிலைய கொலை வழக்கு எதிரி ஒருவர் உட்பட ஒரே நாளில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது. தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார்அதிரடி நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருநெல்வேலி தச்சநல்லூர், மேலத்தெருவைச் சேர்ந்த மலையரசன் மகன் (1) மணிகண்டன் (வயது 32), சேரனமகாதேவி, மேலக்கூனியூர், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணி மகன் (2) தங்கச்செல்வன் (வயது 26), முறப்பநாடு பக்கப்பட்டி வடக்குத்தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் (3) சின்னத்தம்பி (வயது 23), திருநெல்வேலி தாழையூத்து கட்டுடையார் குடியிருப்பு, நியூகாலணியைச் சேர்ந்த பெருமாள் மகன் (4) மகாராஜன் (வயது 31), பாளையங்கோட்டை, கீழநத்தம் வெள்ளக்கோவில், சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் (5) சண்முகராஜன் (வயது 23), திருநெல்வேலி தாழையூத்து, கட்டுடையார்குடியிருப்பு, மேலபுத்தனேரி, காந்திநகரைச் சேர்ந்த (6) சின்னத்தம்பி என்ற ராசுக்குட்டி (வயது 19) ஆகிய 6 பேரும் ஒரு ஆட்டோவில் கடந்த மாதம் 24 ம்தேதி அன்று மாலை சாயர்புரம் பகுதிக்கு வந்து, அங்குள்ள கடைகளில் மாமூல் கேட்டு வீச்சருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ரவுடித்தனம் செய்து, பொதுமக்களையும் அச்சுறுத்தினர். இந்த தகவலறிந்து சாயர்புரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த வீச்சருவாள், அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் முற்றும் அவர்கள் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

மேற்படி ரவுடிகள் பல கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது, 1வது எதிரியான மணிகண்டன் என்பவர் மீது திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலையத்தில் 3 கொலை வழக்குகளும், ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலையத்தில் 1 கொலை வழக்கும், ஆத்தூரில் 1 கொலை வழக்கும் ஆக மொத்தம் 5 கொலை வழக்குகளும், தச்சநல்லூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 வழக்குகளும், மேலப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு1ம், ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரை காவல் நிலையத்தில் கொலை முயற்சி 1ம், திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் 1 கொலை முயற்சி வழக்கும், ஆத்தூரில் 1 கொலை முயற்சி வழக்கும், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் 1 கொலை முயற்சி வழக்கும், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 1 கொலை முயற்சி வழக்கும், மேலப்பாளையம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசி கொலை முயற்சி வழக்கு 1ம், ஆக மொத்தம் 20 வழக்குகள் உள்ளன. மேலும் இவர் 3 முறை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3வது குற்றவாளி சின்னத்தம்பிக்கு முறப்பநாடு காவல் நிலையத்தில் 1 கொலை வழக்கும், திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட 1 வழக்கும், திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்ட 1 வழக்கும், அதே போன்று தச்சநல்லூர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் ஆக மொத்தம் 5 வழக்குகள் உள்ளன.

6வது எதிரியான ராசுக்குட்டி என்ற சின்னத்தம்பிக்கு முறப்பநாடு காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குளும் உள்ளனர். மற்ற எதிரிகளான தங்கச்செல்வன், மகாராஜன், சண்முகராஜன் ஆகியோர் மேற்படி எதிரிகளுக்கு நெருங்கிய கூட்டாளிகளாவார்கள்.

இவர்கள் கொலை, கொள்ளை, வழிப்பறி, கொலை மிரட்டல் என பல மாவட்டங்களில் 27 வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்பபடி எதிரிகள் 6 பேரில் திருநெல்வேலி தச்சநல்லூர், மேலத்தெருவைச் சேர்ந்த மலையரசன் மகன் (1) மணிகண்டன் (வயது 32), சேரனமகாதேவி, மேலக்கூனியூர், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணி மகன் (2) தங்கச்செல்வன் (வயது 26), முறப்பநாடு பக்கப்பட்டி வடக்குத்தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் (3) சின்னத்தம்பி (வயது 23), திருநெல்வேலி தாழையூத்து கட்டுடையார் குடியிருப்பு, நியூகாலணியைச் சேர்ந்த பெருமாள் மகன் (4) மகாராஜன் (வயது 31), திருநெல்வேலி தாழையூத்து, கட்டுடையார்குடியிருப்பு, மேலபுத்தனேரி, காந்திநகரைச் சேர்ந்த (5) சின்னத்தம்பி என்ற ராசுக்குட்டி (வயது 19) ஆகிய 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

அதே போன்று கடந்த ஆகஸ்ட் 31ம்தோதி அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் கடற்கரை பகுதியில், அதே பகுதி மாதவநாயர் காலணியைச் சேர்ந்த கோபுரத்தான் மகன் காளிமுத்து (38) என்பவரை அடித்து கொலை செய்த வழக்கில், தூத்துக்குடி திரேஸ்புரம் தொம்மையார்கோவில் தெருவைச் சேர்ந்த கிளாஸ்டன் மகன் கிசிங்கர் (28) உட்பட 5 எதிரிகளை தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி வழக்கின் முக்கிய எதிரியான கிசிங்கர் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் எதிரிகள் 6 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்கள் மேற்படி எதிரிகள் 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் எதிரிகள் 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தார்.

17,007FansLike
18FollowersFollow
312SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சொன்னதை செய்துகாட்டிய கன்னியாகுமரி எஸ்.பி பத்ரிநாரயணன்

0
கன்னியாகுமரி - நவ : 30 புதிதாக போக்குவரத்து சிக்னல் திறந்த வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…..நவ 30, கன்னியாகுமரி மாவட்டம், 2017 யில் மாவட்ட...

‘காவலர் நிறைவாழ்வு பயிற்சி” பட்டறையின் 3 நாட்கள் பயிற்சியின் நிறைவு நாளான இன்று தூத்துக்குடி...

0
தூத்துக்குடி - நவ :29 இப்பயிற்சியானது மன அழுத்தத்தை போக்குவதற்காக தமிழக அரசு காவல்துறையினரின் ‘காவலர் நிறை வாழ்வு பயிற்சியை...

திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில் 5 கோடி மதிப்பிலான துப்பாக்கி சுடுதளம் அமைக்கபட்டு அதற்க்கான...

0
திருச்சி - நவ : 29 செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக் திருச்சி ரைபிள் கிளப்...

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து மக்களின் பயத்தை போக்குவிதமாக மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - நவ : 29 ஸ்ரீவைகுண்டம் காவல்துறை சார்பாக, இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை...

நிவர் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வ இளைஞர்களுக்கு எஸ்.பி.ஞீ அபிநவ் பாராட்டு

0
கடலூர் - நவ : 29 கடலூர் மாவட்டத்தில்நிவர் புயலின் தாக்கத்தினால் பொதுமக்களை பாதுகாக்ககாவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர்...

தற்போதைய செய்திகள்