86 F
Tirunelveli
Monday, November 30, 2020
முகப்பு தமிழ்நாடு குலசை தசரா திருவிழாவிற்க்கு பக்தர்கள் நேரில் வர தடை தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் அறிவிப்பு

குலசை தசரா திருவிழாவிற்க்கு பக்தர்கள் நேரில் வர தடை தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் அறிவிப்பு

தூத்துக்குடி – அக் : 24

குலசேகரப்பட்டடினம் திருக்கோவில் தசரா பத்தாம் திருவிழா மற்றும் அதற்கு அடுத்த நாள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் கோவிலுக்கு வர அனுமதி இல்லை என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 17ம்தேதி அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

கொரோனா தாக்கத்தை கட்டுபடுத்தும் பொருட்டு முதல் நாள் 17 மற்றும் 26, 27 ஆகிய நாட்களில் திருவிழாவிற்கு பொதுமக்கள் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் என்று ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை மறுநாள் 26ம்தேதி பத்தாம் திருவிழா நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வர யாருக்கும் அனுமதி இல்லை என்றும்,

மேலும் பத்தாம் திருவிழா 26 அன்று குலசேகரபட்டினம் கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹாரம் இந்த வருடம் குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் வளாகத்திலேயே நடைபெறவுள்ளது, எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடற்கரை பகுதிகளில் யாருக்கும் அனுமதி கிடையாது என்றும், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் குலசை தசரா திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் பிரபல தொலைக்காட்சி மற்றும் யூடியுப் மூலமாகவும் நேரடியாக ஒளிப்பரப்பபடும்.

இதனை மீறி வரும் பக்தர்கள் சோதனை சாவடிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். ஆகவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தந்து 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் கோவிலுக்கு வராமல் தங்கள் ஊரிலேயே பக்தர்கள் காப்பை கழட்டி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

17,007FansLike
18FollowersFollow
312SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

‘காவலர் நிறைவாழ்வு பயிற்சி” பட்டறையின் 3 நாட்கள் பயிற்சியின் நிறைவு நாளான இன்று தூத்துக்குடி...

0
தூத்துக்குடி - நவ :29 இப்பயிற்சியானது மன அழுத்தத்தை போக்குவதற்காக தமிழக அரசு காவல்துறையினரின் ‘காவலர் நிறை வாழ்வு பயிற்சியை...

திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில் 5 கோடி மதிப்பிலான துப்பாக்கி சுடுதளம் அமைக்கபட்டு அதற்க்கான...

0
திருச்சி - நவ : 29 செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக் திருச்சி ரைபிள் கிளப்...

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து மக்களின் பயத்தை போக்குவிதமாக மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - நவ : 29 ஸ்ரீவைகுண்டம் காவல்துறை சார்பாக, இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை...

நிவர் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வ இளைஞர்களுக்கு எஸ்.பி.ஞீ அபிநவ் பாராட்டு

0
கடலூர் - நவ : 29 கடலூர் மாவட்டத்தில்நிவர் புயலின் தாக்கத்தினால் பொதுமக்களை பாதுகாக்ககாவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர்...

இறந்த காவலரின்‌ குடும்பத்திறக்கு சககாவலர்கள் இனைந்து 24 லட்சம் நிதி உதவி

0
மதுரை - நவ : 29 2003 காவல் உதவும்கரங்கள் சொந்கடந்த 03.10.20ம்தேதிஉடல்நலக் குறைவால் மறைந்த நமது பேட்ஜ் நண்பரும் உதவும்கரங்கள் நண்பருமான பழனிவேல்நாதன் மதுரை...

தற்போதைய செய்திகள்