திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 102 குற்ற விசாரணை முறை சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு 600 இருசக்கர உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விடுதல் தொடர்பாக கடந்த 4 நாட்களாக மாவட்ட காவல்துறையினரால் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட எஸ்பி ரவளி பிரியா முன்னிலையில், கூடுதல் எஸ்பி இனிகோ திவ்யன் மற்றும் ஆயுதப்படை டிஎஸ்பி ஆனந்தராஜ் தலைமையில் பொதுமக்களிடையே வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி ஒருவருக்கு இரு சக்கர வாகனத்தையும் அதற்குண்டான ஆவணத்தையும் மாவட்ட எஸ்பி ரவளிப்ரியா வழங்கினார்