86 F
Tirunelveli
Monday, November 30, 2020
முகப்பு தமிழ்நாடு தேனிமாவட்ட எஸ்பி சாய்சரன் தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வண்கொடுமைக்கு எதிரான கருத்தரங்கம் நடைபெற்றது...

தேனிமாவட்ட எஸ்பி சாய்சரன் தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வண்கொடுமைக்கு எதிரான கருத்தரங்கம் நடைபெற்றது டிஐஜி முத்துசாமி மற்றும் ஆட்சியர் பங்கேற்பு

தேனி – அக் :24

தேனி மாவட்ட எஸ்பி சாய்சரன் தலைமையில் நடைபெற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைக்கு எதிராக நடைபெற்ற கருத்தரங்கு முகாமில் சிறப்பு விருந்தினராக சிறப்புரையாற்றிய தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி(பொறுப்பு) திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி,
மாவட்ட எஸ்பி
சாய்சரண் தேஜஸ்வி கூடுதல் எஸ்பி
ராஜேந்திரன், கூடுதல் எஸ்பி
சங்கரன் பெரியகுளம் டிஎஸ்பி
முத்துக்குமார் மற்றும் விலக்கு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி நிலைய மருத்துவ அலுவலர் ராதா கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கருத்தரங்கு முகாமில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர் கிராமத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தையும், குழந்தைத் திருமணம் குறித்தும், குழந்தை தொழிலாளர் முறை பற்றியும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார், தேனி மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் குறித்து சட்ட வழிமுறைகளையும் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார், திண்டுக்கல் சரக டிஐஜி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, குழந்தை திருமணம் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,பெண்கள் மற்றும் குழந்தைகள் அவசரக் காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் (1098) வழங்கி, அனைத்து மதுபான கடைகளின் முன்பும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது வழங்கப்பட கூடாது என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம்கேட்டுக் கொண்டார்,
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ஒரு குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றிய தன்னார்வலர்களுக்கும், பாலியல் குற்றங்களுக்கு எதிராக சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு விரைவாக தண்டனை கிடைக்கச் செய்த காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மாவட்ட எஸ்பி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டு காவல் நிலையம் வரும் நபர்களை எவ்வாறு அணுகவேண்டும் என்றும், எவ்வாறு விசாரணை செய்ய வேண்டுமென்றும் எடுத்து கூறி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றி, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கச் செய்த காவல்துறையினருக்கு தனது வாழ்த்துக்களையும்,
பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு விளம்பர பதாகைகள் வெளியிட்டனர்.

17,007FansLike
18FollowersFollow
312SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

‘காவலர் நிறைவாழ்வு பயிற்சி” பட்டறையின் 3 நாட்கள் பயிற்சியின் நிறைவு நாளான இன்று தூத்துக்குடி...

0
தூத்துக்குடி - நவ :29 இப்பயிற்சியானது மன அழுத்தத்தை போக்குவதற்காக தமிழக அரசு காவல்துறையினரின் ‘காவலர் நிறை வாழ்வு பயிற்சியை...

திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில் 5 கோடி மதிப்பிலான துப்பாக்கி சுடுதளம் அமைக்கபட்டு அதற்க்கான...

0
திருச்சி - நவ : 29 செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக் திருச்சி ரைபிள் கிளப்...

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து மக்களின் பயத்தை போக்குவிதமாக மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - நவ : 29 ஸ்ரீவைகுண்டம் காவல்துறை சார்பாக, இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை...

நிவர் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வ இளைஞர்களுக்கு எஸ்.பி.ஞீ அபிநவ் பாராட்டு

0
கடலூர் - நவ : 29 கடலூர் மாவட்டத்தில்நிவர் புயலின் தாக்கத்தினால் பொதுமக்களை பாதுகாக்ககாவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர்...

இறந்த காவலரின்‌ குடும்பத்திறக்கு சககாவலர்கள் இனைந்து 24 லட்சம் நிதி உதவி

0
மதுரை - நவ : 29 2003 காவல் உதவும்கரங்கள் சொந்கடந்த 03.10.20ம்தேதிஉடல்நலக் குறைவால் மறைந்த நமது பேட்ஜ் நண்பரும் உதவும்கரங்கள் நண்பருமான பழனிவேல்நாதன் மதுரை...

தற்போதைய செய்திகள்