வேலூர் – அக் : 17

வேலூர் மாவட்டத்தில் இன்று தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்களுக்கு காவல்துறையினரால் நடைமுறைப்படுத்தப்படும் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் மனுக்களை விரைந்து முடிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.மேலும், காவல்துறையினரால் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வேலூர் சரக டிஐஜி காமினி வேலூர் மாவட்ட எஸ்பி செல்வகுமார் திருப்பத்தூர் மாவட்ட காவல் எஸ்பி விஜயகுமார் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி மயில்வாகனன் வேலூர் மாவட்ட கூடுதல் எஸ்பி மதிவாணன் வேலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பி கண்ணப்பன் வேலூர் ஏஎஸ்பி ஆல்பட் ஜான் தனிப் பிரிவு ஆய்வாளர் அசோகன் மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த டிஎஸ்பிக்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.