தூத்துக்குடி – அக் : 17

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் இரண்டு கூடுதல் கண்காணிப்பாளரகள், நான்கு துணை கண்காணிப்பாளர்கள் உட்பட 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தினமும் 250 போலீசார் வீதம் 2 பிரிவாக ஆக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

கொரோனா தாக்கத்தை கட்டுபடுத்தும் பொருட்டு முதல் நாள் மற்றும் பத்தாம் நாள் திருவிழாவிற்கு பொதுமக்கள், பக்தர்கள் யாரும் வரவேண்டாம், இரண்டாவது நாள் முதல் முன்பதிவு செய்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஒரு நாளைக்கு 8000 பேர் அனுமதிக்கப்படுவார்கள். மாவட்டத்தில் 1300 தசரா குழுக்கள் உள்ளது, நாளை 18 ம்தேதி முதல் முன்பதிவு செய்த குழுக்கள், ஒரு குழுவிற்கு இரண்டு பேர் மட்டும் கோவில் அலுவலகத்தில் வந்து காப்பு கயிறை பெற்றுக் கொண்டு, தங்கள் ஊரிலேயே பக்தர்கள் காப்பு மற்றும் வேடம் அணிந்து திருவிழா இறுதி நாளன்று பக்தர்கள், தங்கள் ஊரில் தங்கள் பகுதிகளிலேயே காப்பை கழட்டிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இன்று பக்தர்கள் முதல் நாள் திருவிழாவிற்கு வராமல் ஒத்துழைப்பு கொடுத்தது போல பத்தாம் நாள் திருவிழாவிற்கும் யாரும் வராமல் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பக்தர்கள், அவரவர் ஊரிலேயே பிரார்தனையை முடித்துக் கொள்றுமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிகழவின் போது மாவட்ட தலைமையிடத்து கூடுதல் எஸ்பி செல்வன், திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ் சிங் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உடனிருந்தனர்.