திருநெல்வேலி – அக் : 17

பள்ளி மாணவ மாணவியர்களுக்கான காவல்துறையை பற்றிய இணையதள கட்டுரை போட்டி

பிரிவு – 1 : 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை,
நான் காவல் துறை அதிகாரியானால்

பிரிவு – 2 : 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ம் வகுப்பு,
காவல்துறை உங்கள் நண்பன்

பிரிவு – 3 : 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு,
காவல் துறையில் நான் விரும்பும்
மாற்றம்

என்ற தலைப்புகளில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மட்டும் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதி தெளிவாக Scan செய்தோ அல்லது ( Word, Pdf ) Format- ல் E Mail: nellaicopsmc@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு 24-10-2020 -ம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கட்டுரை அனுப்பும் மாணவர்களின் புகைப்படம், படிக்கும் வகுப்பு, பள்ளியின் விபரம் மற்றும் தொலைபேசி எண் இணைக்கப்படுதல் அவசியம்.

ஒவ்வொவொரு பிரிவிற்கும் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்று மூன்று பரிசுகள் உண்டு. மேலும் தலா 10 நபருக்கு ஆறுதல் பரிசும் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்படும்.

குறிப்பு : ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பவேண்டும்.என்ற விதிமுறைகளும் உருவாக்கபட்டுள்ளது