சென்னை – அக் : 17

செய்தியாளர் – ஹெச்.எம் ரிஸ்வான்

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ் குமார் உத்தரவிட்டதின்பேரில், ராயப்பேட்டை சரக உதவி கமிஷ்னர் லெட்சுமணன் தலைமையில், E-2 இராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ், உதவி ஆய்வாளர் இளையராஜா மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் இராயப்பேட்டை பகுதியில் விசரணை மேற்கொண்டு, சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்த 1.பாலாஜி, வ/32, 2.பிரான்சிஸ், வ/47, 3.பிரகாஷ், வ/54 , மற்றும் 4.சுப்பு (எ) சுப்ரமணி, வ/50, ஆகிய 4 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் ரூ. 41,25,000/- மதிப்புள்ள 165 கிலோ எடை கொண்ட கஞ்சா, ஒரு இருசக்கர வாகனம் மற்றும் பணம் ரூ. 9,000/- ஆகியவற்றை கைப்பற்றுதல் செய்து, நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.