அரியலூர் – அக்: 16

அரியலூர் மாவட்டம் கோவிந்தபுரம் கிராமம் அரியலூர் – செந்துறை சாலையில் அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்னா மற்றும் அரியலூர் மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன் இணைந்து சாலை பாதுகாப்பு பற்றியும், கொரானா காலத்தில் முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் இருப்பது பற்றி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் முழு கவசம் அணியாமல் பயணம் செய்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்யவும் மற்றும் சீட் பெல்ட் அணிந்து பாதுகாப்பாக பயணம் செய்ய கேட்டுக்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினர், காவல்துறையினர் உடன் இருந்தனர்.