திருநெல்வேலி செப்டம்பர் -19

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல்துறையினரின் மனவலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் யோகா பயிற்சினை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பயிற்சியில் ஈடுபட்டனர்.இப்பயிற்சியில் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மஹா யோகம் யோக அமைப்பின் முதன்மை ரிஷி, மதிப்பிற்குரிய ரமேஷ் ரிஷி பயிற்சி தலைமையில் ஆசிரியர்களான வெற்றி வேந்தன், வனிதா,அல்லி துரை, சேகர்,வேலுத்தாய், சிதம்பரம், ரிஷி செளந்தரராஜன் ஆகியோரும் பயிற்சி அளித்தனர்.

யோகா பயிற்சியில் காவல்துறையினருக்கு யோகா, தியான பயிற்சி, மூச்சுப் பயிற்சி ஆசனப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது.பயிற்சியின் தொடக்கத்தில் வல்துறையினரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அனைவருக்கும் கபவாத சூப் வழங்கப்பட்டது.