77.3 F
Tirunelveli
Saturday, January 23, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லையின் சுவடு துணை ஆணையர்‌ புன்னகை மன்னன் சரவணன்

நெல்லையின் சுவடு துணை ஆணையர்‌ புன்னகை மன்னன் சரவணன்

சேவை செய்ய குணம் மட்டும்தான் தேவை என்று எல்லோரும் சொல்வார்கள் ஆணால் சேவைக்கு நிறமும் உண்டு இடமும் உண்டு என்று நிருபித்து காட்டியவர்தான் சரவணன் ஆம் நிறம் காக்கி, இடம் போலீஸ் ஸ்டேஷன், என்று மக்களுக்கு தெரியவைத்தவர்
நெல்லையின் துணை ஆணையராக பொறுப்பேற்று ஒருவருடம் முடிந்த நிலையில் நூறுவருடம் செய்யும் பணிகளை செய்து முடித்தவர்

நெல்லையின் துணை ஆணையர் சரவணன் ஒரு பார்வை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் 1977 ஆம் ஆண்டு பிறந்தார் தனது ஆரம்ப கல்வி முதல் 10ஆம் வகுப்புவரை பள்ளிபாளையம் அரசு மேல்நிலைபள்ளியில் படித்தார் 11 மற்றும்12ஆம் வகுப்பை ஈரோடு அருள்நெறி திருப்பவிமன்றம் உயர்நிலைபள்ளியில் முடித்தார் பிறகு பிகாம் மற்றும் எம் காம் கல்லூரி படிப்பை ஈரோட்டில் உள்ள ஞீ வாசவி கல்லூரியில் முடித்தார் மாணவ பருவத்திலே தமிழ்மொழி மீதும் விளையாட்டு சினிமா எழுத்து கவிதை போன்றவைகள் மீதும் விருப்பம் உடையவராக இருந்தார்

குருப் -1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2003 ஆம் ஆண்டு பயிற்சி டிஎஸ்பி பணியை முடித்துவிட்டு 2004 ஆம் ஆண்டு தர்மபுரியில் டிஎஸ்பியாக முதல் போலீஸ் பணியை துவங்கினார் அங்கு ஆறுமாதம் பணி செய்துவிட்டு 2004 ஆம் ஆண்டு முதல் 2006 வரை ராமநாதபுரம் டிஎஸ்பியாக வேலைசெய்தார் பிறகு 2007 ஆம் ஆண்டு முதல் 2010 வரை சென்னை எஸ்பிசிஐடி டிஎஸ்பியாக பணிசெய்தார் 2010 ஆம் ஆண்டு ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றார் 2010 முதல் 2013வரை அதே எஸ்பிசிஐடி பிரிவில் ஏடிஎஸ்பியாக பணிசெய்தார்

2013 ஆம் ஆண்டு எஸ்பியாக பதவி உயர்வு பெற்று 2013 முதல் 2016 வரை ஓசிஐயு பிரிவில் எஸ்பியாக வேலை செய்தார் பிறகு 2016 முதல் 2017 வரை கோயம்புத்தூர் மாநகரில் குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக பணிசெய்தார் அங்கு பணிசெய்யும் பொழுதுதான் தமிழகத்திலே முதல் முறையாக பஸ் பே பேருந்து ஒதுக்கம் அதாவது டிராபிக் ஜாம்மை தடுக்க சிட்டியில் ஓடும் பஸ்கள் மெயின் ரோட்டில் வேறு எந்த வாகனங்களுக்கும் இடையூறு இல்லாமல் ஒதுக்கி மக்களை ஏற்றவும் இறக்கவும் வழியினை ஏற்படுத்தினார் இந்த முறை தமிழகத்தில் இவரால் அறிமுகம் செய்யப்பட்டது

பிறகு காவல்துறையின் சாதனைகளை பாதுகாத்து அதை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் விதமாக காவல்துறை மியுசியம் துவங்கினார் தமிழகத்தில் காவல்துறைக்கு என்று ஒரு மியுசியம் முதன்முதலில் இவராலே உருவாக்கபட்டது பிறகு டிராபிக் பார்க் உருவாக்கபட்டு அந்த பார்க்கில் கல்லூரி மாணவிகளுக்கு இலவச டிரைவிங் சொல்லிகொடுத்து அதில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு டிரைவிங் லைசென்ஸீம் இலவசமாக இவரால் வழங்கபட்டது இந்தியாவிலேயே முதல்முதலாக இந்த திட்டம் இவரால் அறிமுகபடுத்தபட்டது

இது போன்ற பயனுள்ள திட்டங்களால் கோவை மக்கள் மற்றும் மாணவிகள் பெரிதும் பயனடைந்தனர் பிறகு 2017 முதல் 2019 வரை சென்னை கமிஷ்ணர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவு டிசி யாக பணிபுரிந்தார் பிறகு அங்கிருந்து மாறுதலாகி 2019ஆம் ஆண்டு ஜீலை 8 ம்தேதி திருநெல்வேலியில் துணை கமிஷ்னராக பொறுப்பேற்றார் வந்த உடனே திருநெல்வேலி மிகவும் புகழ்பெற்ற ஆணி தேர்விழா துவங்கியது அந்த தேர்விழா லட்சகணக்கில் மக்கள் வருவது வழக்கம் அதனை மிகவும் சிறப்பாக கையான்டவர் முறையான திட்டமிடுதலோடு ,சிசிடிவி கேமராக்கள், டிரோன் ,வாட்ச் டவர் சேப்டி பின்கள் போன்றவைகளால் ஒரு திருட்டு சம்பவம் கூட நடைபெறாமல் கூட்ட நெரிசல் பிரச்சனைகள் இல்லாமல் மிகவும் அழகாக தேர் விழாவை வெற்றிகரமாக முடித்தார்

பிறகு தமிழகத்தையே உலுக்கிய பட்டபகலில் நடந்த முன்னால் மேயர் உமா மகேஸ்வரி கொலையில் ஒரு சின்ன தடயம் கூட இல்லாத நிலையில் தனது அறிவு நூட்ப்பத்தால் ஒரேவாரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்தார் இவர் உருவாக்கிய மக்களை நோக்கிய மாநகரகாவல் , வேர்களை தேடி போன்ற திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது இந்த திட்டங்களுக்காக டெல்லியில் செயல்படும் ஸ்காட்ச் நிறுவனம் இவரின் பொதுமக்களுக்கு உதவும் வித்தியாசமான அணுகுமுறையை பாராட்டி வெள்ளி பதக்கம் விருது வழங்கியது

நாடெங்கும் குடியுரிமை திருத்த சட்ட மசோதவால் மிக பெரிய வன்முறை நடந்து கொண்டிருந்த நிலையிலும் திருநெல்வேலியில் மட்டும் அமைதி போராட்டமாகவே நடைபெற்றதற்க்கு இவரின் அனுகுமுறையும் செயல்பாடுகளுமே காரணம் தமிழக அரசால் பெண்கள் பாதுகாப்பிற்க்காக உருவாக்கபட்ட காவலன் sos செயலி குறித்து விழிப்புணர்வு மற்றும் பதிவிறக்கம் செய்வதில் திருநெல்வேலி மாநகரமே முதலிடத்தில் இருந்தது அதற்க்கும் இவரின் தீவிர செயல்பாடே காரணம் நெல்லையில் ஏழை மக்களின் புற்று நோயாக இருந்து வந்த கந்து வட்டி பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும் விதமாக ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ஆட்சியர் உதவியுடன் கூட்டறவு வங்கியின் எளிய முறையில் கடன் பெரும் திட்டத்தை அறிமுகபடுத்தி ஏழை மக்களின் கடனில்லா வாழ்விற்க்கு வழி செய்தார்

திருநங்கைகளின் எதிர்கால வாழ்விற்க்கு உதவும் வகையில் தையல் இயந்திரம் அவர்கள் சமுகத்தில் எல்லோரையும் போல அவர்களுகளும் சமமாக நடத்தபடவேண்டும் என்றால் கல்வி முக்கியம் என நினைத்து அவர்கள் படிபபதற்க்கு உதவும் வகையில் பல்வேறு உதவிகளை செய்தார் கொரனா காலங்களில் தன் உயிரையும் பெரிதாக நினைக்காமல் பணி செய்த சுகாதார உழியர்களை கொவுரவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் முதல்முறையாக காவல்துறை மரியாதை அணிவகுப்பை நடத்தி அவர்களின் பணிகளுக்கு ஊக்கம் அளித்தார்

கொரனா தொற்றால் திடிரென ஊரடங்கு அமலுக்கு வந்த நேரத்தில் உதவி தேவைபடுவோருக்கு மற்றும் உதவி செய்ய நினைப்பவரையும் ஒன்றாக இணைத்து வாட்ஸ் ஆப் குழு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இவர் உதவி செய்து வந்தார் இந்த செயல் தமிழக முதல்வர் கவனத்திற்க்கு சென்று இவரை வெகுவாக பாராட்டினார் ஒரு முதல்வர் ஒரு காவல்துறை அதிகாரியின் பெயரை வெளியிட்டு பாராட்டியது இதுவே முதல்முறை சென்னைக்கு அடுத்த நிலையில் திருநெல்வேலி மாநகரம்தான் சிசிடிவி நகரமாக மாறிவருகிறது இந்த மாற்றமும் இவரின் முயற்ச்சியில்தான் நடந்தது வருகிறது

உள்ளூர் பத்திரிக்கையில் துவங்கி சமுகவலைதளம் எப் எம் மற்றும் அல்லாமல் இந்தியாவின் முண்ணனி ஊடகங்கள் வரை காவல்துறையின் பெருமையை கொண்டு சேர்த்தவர் காவல்துறை மக்களின் நண்பன் என்ற வாசகத்தை உண்மைபடுத்தி காட்டியவர் திரைபட நடிகர்களின் திருநெல்வேலி மாநகர ரசிகர் மன்ற நிர்வாகிகளை சமுகத்தின் மீது உங்களுக்கும் பொறுப்பு உண்டு என்று சமுக அக்கறையுடன் சமுகசேவகர்களாக செயல்படவைத்தவர்

தற்போது வரையிலும் கொரனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்கு அவர்கள் ஆரோக்கியத்துடன் மீண்டும் பணிசெய்வதற்க்கு அனைத்து உதவிகளையும் செய்துவருபவர் யாராவது விலையுயர்ந்த பொருளையோ அல்லது பனத்தையோ தவறவிட்டுவிட்டால் அதை கையில் எடுக்கும் நபர் நேராக கமிஷ்னர் அலுவலகம் வந்து சரவணனிடம் கொடுப்பதும் அதை அவர் உரியவரிடம் ஒரு சில மணிநேரங்களில் ஒப்படைப்பதும் பொதுமக்கள் இவர் மீது வைத்துள்ள நல்ல என்னத்தை காட்டுகிறது

ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசால் வழங்கபடும் சிறந்த பொதுமக்கள் சேவைக்கான விருதையும் பெற்றவர் நதியில் ஓடும் நீர் ஒரே இடத்தில் இருப்பதில்லை ஆணால் நதியின் பெயர் அதே இடத்தில் இருக்கும் அதேபோல் காவல்துறையில் எந்த அதிகாரிகளும் ஒரு இடத்தில் இருப்பதில்லை ஆணால் அவர் செய்யும் செயல்கள் அங்கே தங்கிவிடுகின்றன சுவடுகளாய் அதுபோன்று ஒருவர்தான் சரவணன் சுவடுகளாய் என்னென்றும் நெல்லை மக்கள் மற்றும் காவலர்கள் மனதில்

17,007FansLike
19FollowersFollow
329SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கணவரை கொலை செய்த மனைவி கைது – மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன - 23 , 2021 தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி லாயல் மில் காலணியைச் சேர்ந்த தம்பதியினர்...

32 – வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள்...

0
திருநெல்வேலி - ஜன - 23 , 2021 ஜனவரி 18 முதல் பிப்ரவரி...

தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனமான கியூப் நிறுவனத்தின் சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன - 23 , 2021 தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம்...

கோவில்பட்டியில் சாலைவிதிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த இருசக்கர வாகண பேரணியை மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - ஜன - 23 , 2021 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் காவல்துறை சார்பாக நடைபெற்ற இருசக்கர...

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த இரு சிறுவர்களை காப்பாற்றிய நபரை மாவட்ட...

0
திருநெல்வேலி - ஜன - 23 , 2021 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலை நகர் பகுதியைச் சேர்ந்த 15...

தற்போதைய செய்திகள்